Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின்
இணைய “சூம்” வழி மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இன்று (11.07.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிவரையில் நடைபெற்றது. Read more

நாட்டில் மேலும் 986 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இலங்கையின் மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 274,017 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த திகதிகளில், 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

மருத்துவ காரணங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்தார். Read more

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் கஸ்ரப்படுகின்ற நிலையில் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, திருக்கோவில் ஆகிய இடங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட 26 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியில் தலா 1910 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் இன்று (2021/07/10) வழங்கி வைக்கப்பட்டன. Read more

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read more

அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில், இன்று (10)  கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படுமென புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின்  தலைவர் சி.க.செந்தில்வேல் அறிவித்துள்ளார். Read more

கொரோனா பாதிப்பு காரணமாக யாழ் மாவட்டத்தில் வசிக்கும் தேவையுடைய சில
கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு புளொட் ஜேர்மன் கிளை தோழர்களின் நிதியிலிருந்து நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. Read more

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 9 July 2021
Posted in செய்திகள் 

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வாழ்விடமாகவும் கொண்ட திரு. செல்லையா பரமலிங்கம் அவர்கள் 03.07.2021 சனிக்கிழமை டென்மார்க்கில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more