Header image alt text

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களால் பெறப்பட்ட அனைத்து விதமான விஸாக்களின்  செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  5,017 பேர் உயிரிழந்துள்ளனர். Read more

நாட்டில் மேலும் 976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 327,019 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

இலங்கையில் டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம்  வெளியிட்டுள்ளது.

Read more

ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியாமற்போனமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு நீதவான் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன் பிணையை வழங்க, கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டது. Read more

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில், தற்போதைய சுகாதார நிலைமை காரணமாக நாட்டை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள  இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, எனினும்,   சில கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்றார். Read more

இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையை கைவசம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். Read more