யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இல: 13, மத்திய வீதி, உவர்மலை, திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குருபரன் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி நாகலிங்கம் இன்பமலர் அவர்கள் இன்று காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
யாழ்ப்பாணம் மணலடைப்பு இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசந்தபுரம் இளவாலையை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத் தோழர் குலசிங்கம் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி முருகன் கந்தி அவர்கள் இன்று காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள தேவாலயத்தில் நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பான விவரங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் ஐவர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.