நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இன்று (29) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இது உறுதிப்படுத்தப்பட்டதாக அவரது செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளான எம்.பி.க்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொண்டிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐ.டி. எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சபாநாயகர் காரியாலயத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான வர்த்தமானி அறிவித்தல், வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு, பெப்ரவரி மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக களக் கணக்கிட்டு காலத்தில் கிராம உத்தியோகத்தர் இடமாற்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலக நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். 88 மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 82 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 6 பேருக்கும் டெல்டா பிறழ்வு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.