கடுகன்சேனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும் தோழர் லாலா (ரவிக்குமார்) அவர்களின் அன்புத் தந்தையுமாகிய திரு. சிதம்பரம் இராமன் அவர்கள் நேற்று (30.01.2022) ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
நேற்று (30), 21 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (31) தெரிவித்துள்ளார்
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி நாடுமுழுவதிலும் உள்ள பல்வேறு பாடசாலைகளின் வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து செயற்படுத்த சுகாதாரத்துறையின் பிரதானிகள் தீர்மானித்துள்ளனர்.
இன்று (31) முதல் நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (30) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இராணுவத்தளபதி இதனை தெரிவித்திருந்தார்.