Header image alt text

துணை வைத்திய நிபுணர்களுக்கான கூட்டுப் பேரவையானது, மேல் மாகாண எல்லைக்குட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (26) காலை 7.00 மணி முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை  ஆரம்பித்தது. Read more

நாட்டில் மேலும் 16 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (25) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,346 ஆக பதிவாகியுள்ளது. Read more

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலக தீர்மானித்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

25.01.1999இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் சதீஸ் (தில்லைநாதன் சந்திரமோகன்) அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…

நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டடோரின் எண்ணிக்கை 891ஆக அதிகரித்துள்ளது.  அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 603,654 ஆக அதிகரித்துள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

புலிகளின் ஊடக இணைப்பாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read more

ஈஸ்டர் தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் தெரிவித்தார்.  எங்கள் மக்களிடமிருந்து எங்களுடைய மக்களுக்கு நீதி கிடைக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம் எனவும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன எனவும் தெரிவித்தார். Read more

தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இனிமேல் பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என்றும், அதற்கான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். Read more

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால், வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள், இன்று (24) கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more