14.05.2022 சனிக்கிழமை அன்று காரைதீவில் நடைபெறவிருந்த தோழர் பக்தன் (சிவநேசன்) ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும், நாளை (12) பிற்பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை (13) காலை 6 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்துவது உட்பட சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு காரணங்களுக்காக திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுச் சொத்துக்களைக் கொள்ளையப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன விசேட அறிக்கை ஒன்றை விடுத்து உரையாற்றுகையில்.