Header image alt text

இலங்கை மக்களுக்காக, இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புகளை செய்துவருகின்றது.

25 தொன்களுக்கும் அதிக நிறையுடையதும்  260மில்லியன் பெறுமதியானதுமான நன்கொடையான ஒருதொகுதி மருந்துப்பொருட்களை பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், சுகாதார அமைச்சர்   கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கொழும்பில் வைத்து இன்று (27) கையளித்தார். Read more

வாகனங்களுக்கு பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருள் தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய செயலி (App) ஒன்று பொலிஸாரால் உருவாக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் முறையற்ற வகையில் இடம்பெறுவதை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். Read more

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கையை ரஷ்ய தரப்பு பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உதவி வழங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தற்போது பரிசீலித்து வருவதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read more

நாட்டில் பற்றாக்குறையாகவுள்ள மயக்க மருந்துகளில் ஒரு தொகை, பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் மூன்று மாதங்களுக்கு போதுமானவை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். Read more

இலங்கையின் நெருக்கடியான சூழலில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து பணியாற்றுவதற்கு இணங்கியுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. Read more

உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக சந்திப்பொன்றின் போது அதில் பங்கேற்றிருந்த உலக வங்கியின் உயரதிகாரியான டேவிட் மெல்பாஸ் குறிப்பிடுகையில், ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக, உணவு, எரிபொருள் மற்றும் உரம் போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதால் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என அறிவித்துள்ளார். Read more