ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ். மாவட்ட கிளைக் கூட்டம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் அவர்களின் தலைமையில் இன்று சுன்னாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், செயலாளர் நா.இரட்ணலிங்கம், பொருளாளர் க.சிவநேசன், உபதலைவர் ராகவன், தேசிய அமைப்பாளர் தவராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும், கட்சியின் செயற்பாடுகள் குறித்தும், கட்சியின் யாழ். மாவட்ட அரசியல் செயற்பாடுகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

இக்கூட்டத்தில் கட்சியினுடைய பிரதேசசபை தவிசாளர்கள், கட்சியின் மாநகரசபை, பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதேவேளை வவுனியாவில் மாவட்ட மட்டத்திலான கட்சி உறுப்பினர்களிடையேயான கூட்டம் இன்றுமாலை கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.