ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளம் 800 மீற்றர் வீதி அவ்வூர் இளைஞர்களின் பங்களிப்புடன் பிரதேச சபை கனரக வாகனங்கள் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டது.

சேமமடு வட்டார பிரதேச சபை உறுப்பினர் த. சிவராசா அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற புனரமைப்பு பணிகளில் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு. சிவகுமார் அப்பிரதேச மக்கள் பெரும் திரளான இளைஞர்கள் உழவு இயந்திர உரிமையாளர்களுடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.