Header image alt text

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க தூதுவர் Julie Chung வாழ்த்து தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். Read more

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இன்றுமாலை பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் பிரதமராக ரணில் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாட்டின் பொறுப்புக்களை பொறுப்பேற்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது. Read more

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது, எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் விசேட அனுமதி பெற்று விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(12) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட 14 பேர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடியுள்ளார். Read more

14.05.2022 சனிக்கிழமை அன்று காரைதீவில் நடைபெறவிருந்த தோழர் பக்தன் (சிவநேசன்) ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும், நாளை (12) பிற்பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை (13) காலை 6 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்துவது உட்பட சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more