Header image alt text

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) சார்பில் ரூ.13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. Read more

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாளை (06) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார தரப்பினர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக தரப்பினர், போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நாளைய ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர். Read more

நாளைய தினம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். நாளை மட்டுமல்ல எரிபொருள் இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் அடுத்த சில நாட்களிலும் பேருந்துகள் சேவையில் ஈடுபடாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாளை (06) நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தமது சேவைகளை நிறுத்தப்போவதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. Read more

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறி செயற்பட்டதாக தெரிவித்து இன்று (04) பாராளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளை பொலிஸார் கைது செய்தனர். Read more

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 55 பேர் தொடர்ந்து மே 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் உத்தரவிட்டார்.

Read more

அரசாங்கத்துக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்கார்களுக்கு பஸ்களை இலவசமாக வழங்குவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. Read more

நாளை (5) நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. Read more

மருந்து, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக சீன 300 மில்லியன் சீன யுவான்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more