இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கும், 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடன் தொகையாக வழங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை ஆதரிக்க இந்த கடனை அமெரிக்கா வழங்கும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானி ஒருவரின் சமயோசிதத்தால் நடுவானில் ஏற்பட்ட இருந்த பாரிய விமான விபத்து தடுக்கப்பட்டுள்ளதுடன், விமானமும் பாதுகாப்பாக கொழும்பை வந்தடைந்துள்ளது. திங்கட்கிழமை (13) பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 275 பயணிகளுடன் புறப்பட்ட யூஎல்504 என்ற விமானம், 30,000 அடி உயரத்தில் கொழும்பு நோக்கி பறந்து கொண்டிருந்தது.
சட்டவிரோதமான முறையில், நாட்டைவிட்டு தப்பியோட முயன்ற மேலும் 64 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்குக் கடலில் வைத்தே இவர்கள், இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை நல்குவேன் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அறிவித்துள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன், மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.