பௌத்த சிங்கள மக்களே வாழந்திராத ஒரு பிரதேசத்தில் பௌத்தம் சார்ந்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுமானால், அதை ஒரு மரபுரிமைச் சின்னமாக பாதுகாப்பதே நியாயமானது. அதைவிடுத்து பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீளுருவாக்கம் செய்து வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. Read more
சிரேஷ்டத்துவத்திற்கும் பதவி ஓய்விற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், 5 வருட காலத்திற்கு அரசாங்க ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச ஊழியர்கள், வேலை வாய்ப்புக்காக 5 வருடங்களுக்கு வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை வழங்குவதற்கான சுற்றிக்கையை பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே, இன்று (22) வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஹமில்டன் ரிசர்வ் வங்கி வழக்கு தாக்கல் செய்துள்ளது என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய உயர்மட்டக்குழு தூதுக்குழு, இலங்கைக்கு நாளை (23) விஜயம் செய்யவிருக்கின்றது. பிரதான பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழுவினரே இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழைப்பு நல்குவது குறித்து இந்தத் தூதுக்குழு கூடுதல் கவனம் செலுத்தும்.