எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர்களை பதிவுசெய்து கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூலை முதல் வாரத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். Read more
நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (12) அதிகாலையில் கைது செய்து அம்பாறை பாணமை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் ஆகியன இணைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களை பொதுமக்கள் இலகுவாக அணுகும் இணையத்தளமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.
குடிவரவு திணைக்களம் எதிர்வரும் (13) ஆம் திகதி திறந்து இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் என்பவற்றை இலங்கை கையாள வேண்டும் என நாமோ அல்லது சர்வதேச சமூகமோ கூற முன்னர் இலங்கை மக்களே வலியுறுத்தினர். சகல இன, மத மக்களின் உரிமைகளையும் பாதுகாக்காது விட்டால் நாடாக முன்னோக்கி செல்ல முடியாது என இலங்கைக்காக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
எம்.சி.சி உடன்படிக்கையை இனிமேல் இலங்கையில் முன்னெடுக்கப்போவதில்லை. அதனை வேறு ஒரு நாட்டிற்கு வழங்கியுள்ளோம். துரதிஷ்டவசமாக இலங்கை நல்லதொரு வாய்ப்பை இழந்துள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் இலங்கைக்கான நிதியுதவியைப் பெறுவதற்கும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உதவிகளை கோரியுள்ளார். 