இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கும், 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடன் தொகையாக வழங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை ஆதரிக்க இந்த கடனை அமெரிக்கா வழங்கும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானி ஒருவரின் சமயோசிதத்தால் நடுவானில் ஏற்பட்ட இருந்த பாரிய விமான விபத்து தடுக்கப்பட்டுள்ளதுடன், விமானமும் பாதுகாப்பாக கொழும்பை வந்தடைந்துள்ளது. திங்கட்கிழமை (13) பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 275 பயணிகளுடன் புறப்பட்ட யூஎல்504 என்ற விமானம், 30,000 அடி உயரத்தில் கொழும்பு நோக்கி பறந்து கொண்டிருந்தது.
சட்டவிரோதமான முறையில், நாட்டைவிட்டு தப்பியோட முயன்ற மேலும் 64 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்குக் கடலில் வைத்தே இவர்கள், இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை நல்குவேன் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அறிவித்துள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன், மேற்கண்வாறு தெரிவித்துள்ளார். 
ஏற்கனவே அறிவித்ததற்கு அமைய எதிர்வரும் மூன்று வாரங்கள், எரிபொருள் குறித்த கடினமான காலம் என்றும் நாடு முழுவதும் தற்போது காணப்படும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகளில் இது தெளிவாகத் தெரிகிறது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டதாக இலங்கை அதிகாரி ஒருவர் கூறிய சர்ச்சைக் கருத்து தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்தது.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் வெள்ளிக்கிழமை (17) தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் எனவும் அனைத்து பஸ் உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலக நேரிடலாம் என்றும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இந்தியாவின் திருச்சிக்கும் பலாலிக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்கவும் பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவைகளை நடத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கைக்கு உதவ அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கன் இணக்கம் வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.