பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட அகால மரணங்கள் காரணமாக குடும்பத் தலைவர்களை இழந்த இரண்டு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) இன் ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா வாழ் உறுப்பினர்களின் நிதி பங்களிப்பில் கட்சியினுடைய சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பாரதி மகளிர் அபிவிருத்திச்சங்கத்தினர் பத்து(10) பேருக்கு சிறு தொழில் முயற்சியை மேற்கொள்வதற்காக
மிகப் பெரிய பெற்றோலிய விநியோக நிறுவனங்களில் ஒன்றான பெட்ரோ சைனா அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஈடுபட்டுள்ளார். இந்த கலந்துரையாடலில் நிறுவனத்தின் பிரதித் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டதாக, அமைச்சர், இன்று (02) டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. பல்வேறு அரசியல் காரணங்களால் அவ்வப்போது தேசிய கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவிடமிருந்து 12 மில்லியன் டொலர் பெறுமதியான வைத்திய நிவாரண உதவிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன. அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டுடன் இந்த வைத்திய நிவாரணப் பொருள்கள் கிடைத்துள்ளது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.