Header image alt text

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு  இன்று (21)  பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில்,  சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 1 வாக்கும் பிரயோகிக்கப்பட்டன. Read more

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 82வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்  இன்று (21) வெள்ளிக்கிழமை  காலை  யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொலிகண்டி  பகுதியில்  உள்ள  பாலாவி முகாம் பகுதியில் இடம்பெற்றது. Read more

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பிரேரணை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். தற்போதுள்ள 8,719 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். Read more

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள்  அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ  முடியும். எனினும் வடக்கு கிழக்கு அதனை கடைப்பிடிப்பதில்லை, இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே  காரணம் என முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர இன்று (21)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். Read more

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. Read more