நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழு, சர்வதேச நாணய நிதியத்தின்  பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கெஞ்சி ஒகாமுராவை சந்தித்துள்ளது.  சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உத்தேச விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுக் குழுவின் ஒப்புதலை பெறுவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அண்மைக்கால பொருளாதார நிலைமைகளும் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது