தீபாவளி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நட்சத்திரம் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து (கிரிக்கட்) சுற்றுப் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயூரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா நகரசபை உறுப்பினர் திரு.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களும், கௌரவ விருந்தினராக ஸ்டார் நிறுவன உரிமையாளர் திரு.ஜெகன் மற்றும் துர்க்கா நிறுவன உரிமையாளரும் புளொட் தோழருமான திரு.சங்கர் அவர்களும் ஐக்கிய நட்சத்திரம் விளையாட்டுக் கழக முன்னாள் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இறுதிப் போடடியினை ஆரம்பித்து வைத்ததுடன் Read more
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் மறைந்த பொதுச்செயலாளர் தோழர் ஆனந்தியண்ணர் (அமரர் சுப்பிரமணியம் சதானந்தம்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக, அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்ட 50,000 ரூபாய் நிதியில், வவுனியா கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளகத்தைச் சேர்ந்த சிறார்கள் மற்றும் முதியோர்களுக்கு விசேட உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 4,271 குடும்பங்களைச் சேர்ந்த 18,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கைதிகள் உட்பட எட்டு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். குறித்த மூவரின் விடுதலைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சம்மதம் தெரிவித்ததையடுத்தே அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 45 பேர் உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து, இன்று (23) காலை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.