பதுளை மாவட்டம் கொஸ்லந்த, மீரியபெத்தை பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் எட்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. மீரியபெத்தை மண்சரிவில் மரணித்த 37பேரின் உறவுகளின் துயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் பங்குகொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம். Read more
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக போக்குரவத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், கட்டணத்தைக் குறைப்பதாக தெரிவித்திருந்தார்.
இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கன் எயார்லைஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீலங்கன் சமையல் கேட்டரிங் மற்றும் தரை சேவை கையாளுகை பிரிவு ஆகியவற்றின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.