கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத் கூட்டம் கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன் அவர்களின் தலைமையில், சிரேஷ்ட துணைத்தலைவர் தோழர் வே.நல்லநாதர், செயலாளர் தோழர். இரட்ணலிங்கம், பொருளாளர் தோழர் க.சிவநேசன், நிர்வாக பொறுப்பாளர் தோழர் ம. பத்மநாதன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (30.10.2022) வவுனியாவில் நடைபெற்றது. Read more
30.10.2007இல் முருகனூரில் மரணித்த தோழர்கள் செல்வராஜா (சிதம்பரப்பிள்ளை செல்வராஜா – சிதம்பரபுரம்), ரஞ்சன் (இருதயம் வேதராசா) ஆகியோரின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை ஏற்பட்ட ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர் காயமடைந்துள்ளர். உயிரிழந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றார். கண்டியைச் சேர்ந்த 27 வயதான ஆண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
பல்வேறு சட்ட காரணங்களுக்காக சுங்கப் பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, அரசின் தேவைகளுக்காக விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் தற்போது கடுமையான வாகனப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பொலிஸ் உள்ளிட்ட திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பணிகள் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.