யாழ்ப்பாணம், கிழக்கு மீசாலையைச் சேர்ந்த கட்சியின் செயற்பாட்டாளர் த.கதிர்காமநாதன் (காந்தன்) அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகுஞ்சுக்குளம் கிராமத்தின் மகளிர் அமைப்புக்கு, அமைப்பின் உறுப்பினர்களினது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சுழற்சி முறையிலான கடன் திட்டத்திற்கு ரூபாய் 50,000 வழங்கப்பட்டுள்ளது. Read more
03.11.1988 மாலைதீவில் மரணித்த தோழர்கள் வசந்தி (மணிவண்ணன் – வடலியடைப்பு) , ஜுலி (இளவாலை), அப்பி (பெரியகுஞ்சுக்குளம்) ஆகியோரின் 34ம் ஆண்டு நினைவு நாள் இன்று….
சுவிட்சர்லாந்தின் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இந்த மாதம் முதல் இலங்கையில் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளது. 2022 நவம்பர் 10 முதல் 2023 மே வரை வாரந்தோறும் விமான சேவைகளை சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அஸூர் எயார்லைன்ஸ் நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து புறப்பட்ட அஸூர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ZF1611 என்ற விமானம், 335 பயணிகளுடன் இன்று (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் இடையேயான திருமணப் பதிவுகளுக்கு காணப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க சுற்றுநிருபத்தை இரத்து செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் P.S.P.அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.