இன்றைய தினம் நெடுங்கேணி கற்குளம் அ.த.க பாடசாலையின் இரண்டு அதிபர்கள் மாற்றலாகி செல்வதை முன்னிட்டு பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு அதிபர் ம.செந்தூரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜிரி லிங்கநாதன் மற்றும் ஆசிரிய ஆலோசகர் வசந்தன், கிராமசேவையாளர் பிரதீபன், அயல் பாடசாலை அதிபர் திரு விமலேந்திரன்,
எமது கட்சியின் மூத்த உறுப்பினர் பரமசிவம் அவர்கள் கல்வித்திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு நிலையினை நினைவு கூரும் நிகழ்வு கரப்பங்காடு vores மண்டபத்தில் நடைபெற்றது. சைவப்பிரகாச வித்தியாலய சமூகத்தால் ஏற்ப்பாடு செய்ப்பட்ட இவ்நிகழ்வில் முன்னாள் நகரபிதா ஜிரிலிங்கநாதன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் குகன், செட்டிகுளம் பிரதேச சபைத் தலைவர் தோழர் சிவம், வவுனியா பிரதேச சபை தலைவர் தோழர் யோகன் மற்றும் தோழர்கள் கொன்சால், சிவா அகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால், காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவோர், உடனடியாக கரைக்கு திரும்புமாறு நேற்று (20) வளிமண்டல திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.