இன்றைய தினம் நெடுங்கேணி கற்குளம் அ.த.க பாடசாலையின் இரண்டு அதிபர்கள் மாற்றலாகி செல்வதை முன்னிட்டு பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு அதிபர் ம.செந்தூரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜிரி லிங்கநாதன் மற்றும் ஆசிரிய ஆலோசகர் வசந்தன், கிராமசேவையாளர் பிரதீபன், அயல் பாடசாலை அதிபர் திரு விமலேந்திரன்,
எமது கட்சியின் மூத்த உறுப்பினர் பரமசிவம் அவர்கள் கல்வித்திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு நிலையினை நினைவு கூரும் நிகழ்வு கரப்பங்காடு vores மண்டபத்தில் நடைபெற்றது. சைவப்பிரகாச வித்தியாலய சமூகத்தால் ஏற்ப்பாடு செய்ப்பட்ட இவ்நிகழ்வில் முன்னாள் நகரபிதா ஜிரிலிங்கநாதன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் குகன், செட்டிகுளம் பிரதேச சபைத் தலைவர் தோழர் சிவம், வவுனியா பிரதேச சபை தலைவர் தோழர் யோகன் மற்றும் தோழர்கள் கொன்சால், சிவா அகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால், காங்கோசன்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவோர், உடனடியாக கரைக்கு திரும்புமாறு நேற்று (20) வளிமண்டல திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மேலும் தாமதமாகக்கூடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும். மன்னார் நகருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
பஸ் பயணச்சீட்டுகளை (டிக்கெட்) வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். ஒவ்வொருவரும் தங்களது வங்கிகளின் வரவு அல்லது கடன் அட்டைகள் மூலம் பஸ் கட்டணத்தை செலுத்தும் வகையில் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கௌரவ நிதி அமைச்சராக இருந்த டாக்டர் என்.எம் பெரேரா அவர்கள் 50 ரூபா ,100 ரூபா நோட்டை செல்லுபடியற்றனவாக்கி , ஒழித்து வைக்கப்பட்டிருந்த பணங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்திற்காக பல நடவடிக்கைளை எடுத்து சரி செய்ய முயற்சித்தார். அது மாத்திரம் அல்ல, விசுவமடு போன்ற பகுதிகளிலே எங்கள் இளைஞர்களுக்கு காணி கொடுத்து அவர்கள் மிக செழிப்பான வாழ்க்கை ஒன்றை உருவாக்குவதற்கு உதவிகள் செய்திருந்தார். அந்த நேரத்தில் நாடு கட்டியெழுப்பப்பட்டது.
யாழ். செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ். சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த வேதாரணியம் பிரபாகரன் புவிதா தம்பதிகளின் புதல்வர்களான மதுசன், மாதவன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில்
ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, சந்தேகநபர்கள் தலா 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவிட்டார். குறித்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மிகக் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.