கண்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வெளிக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும் தோழர் ராஜா (சண்முகராசா) அவர்களின் அன்புத் தாயாருமான கந்தையா மாரியாயி அவர்கள் இன்று (09.11.2022) புதன்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகிறோம்.
செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 32 வது ஆண்டு விழாவும் விளையாட்டுப் போட்டியும் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானம் மற்றும் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் பிரதான மண்டபம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் கலாமோகன் (அமரர் செல்லத்துரை கலாமோகன்) அவர்களின் இரண்டாமாண்டு நினைவுகள்…
கொடிகாமம், திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 ல் கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு தொகை நிதி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பின் சமூக மேம்பாட்டுப் பிரிவினால் கையளிக்கப்பட்டுள்ளது. கழக சுவிஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் செல்வபாலனின் பங்களிப்பில் 40,000/= ரூபாய் நிதி பாடசாலை அதிபர் முன்னிலையில் வகுப்பாசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது.
06.11.1988 அன்று இந்து சமுத்திரத்தில் மரணித்த தோழர்கள் நிதி (சோமசுந்தரம் சந்திரபாலன் – நெடுந்தீவு), பாப்பா (முல்லைத்தீவு), கோபி (சங்கானை) சின்னசங்கர் (முல்லைத்தீவு), குமார் (தும்பளை பருத்தித்துறை) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச இளைஞர் அணி நிர்வாகத் தெரிவு 0611.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00மணிக்கு மல்லாவி கோவில் பொது மண்டபத்தில் துணுக்காய் பிரதேச சபையின் துணைத் தவிசாளர் சிவகுமார்/குட்டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா நகரசபையின் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய நிகழ்வுகளின் வரிசையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான “சிறந்த பெற்றோர் ஆதல்” எனும் தலைப்பில் மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவின் ஆதரவோடு 05.11.2022 அன்று வவுனியா பொது நூலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா – மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு… உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம், UNDP, ஐரோப்பிய ஒன்றியம் என்பனவற்றின் ஒழுங்கமைப்பில் சமூகவலைத்தளத்தினூடாக
வவுனியா திருநாவற்குளம் கிராமத்தில் வதியும் பொது மக்களுக்கான தொற்றா நோய் தொடர்பான முகாம் 04/11/2022 அன்று சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. கிராமத்தில் வதியும் பெரும்பாலானோருக்கு நடமாடும் மருத்துவ முகாமும் நடாத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.