அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் இன்று (02) மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. மருதானையில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் நேற்று முன்தினம் (31) இடம்பெற்ற கலந்துரையாடலிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்கள் மற்றும் வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதிகளில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநாடு செல்வதற்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா என உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான திருத்தப்பட்ட கட்டண முறை இன்று (01) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, முதல் தடவையாக தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 200 ரூபாவும், ஒரு நாள் சேவையின் ஊடாக தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 2,000 ரூபாவும் அறவிடப்படும்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்துமயானத்தில் புதைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2019 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நேற்று (31) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் அமைச்சர் உட்பட 4 பேரையும் விடுவித்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.