இன்று குருந்தூர்மலை விவகாரம் தொடர்பாக நீண்டநாள் வழக்குக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின் சாராம்சம் யாதெனில், இது இரண்டு பிரிவினருக்கிடையிலான முரண்பாட்டினால் மன்றுக்கு கொண்டு வரப்பட்ட வழக்கேயன்றி இந்து அல்லது புத்தவிகாரைக்கான வழக்கல்ல. இதில் வழமையான வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கட்டளை பிறப்பிக்கப்பட்டதோடு குறிப்பிட்ட பிரதேசத்தில் எந்த விதமான கட்டடங்களோ அல்லது நிர்மாணப்பணிகளோ மேற்கொள்ளக் கூடாது எனவும் பணிக்கப்பட்டிருந்தது.
கந்தரோடை ஶ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலைய முன்பள்ளியின் விளையாட்டு விழா…
இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்காக இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக Times Of India செய்தி வௌியிட்டுள்ளது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை துறைமுகங்களில் கடற்படை கப்பல்கள் மற்றும் உளவுக் கப்பல்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் Times Of India தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தர்மலிங்கம் பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று(31) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நிதி கையாளுகை தொடர்பில் இன்று(31) மன்றில் ஆஜராகுமாறு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அதிகாரிகளுக்கு கடந்த தவணை வழக்கு விசாரணையின் போது நீதவான் உத்தரவிட்டமைக்கு அமைவாக அனைத்து தரப்பினரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
மன்னாரிலும் கிளிநொச்சி – பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும் மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் குறிப்பிட்டார். அண்மையில் தயாரிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரமொன்றை மேற்கோள்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche இன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். அத்துடன், காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள், அவற்றின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
30.08.1991 – 30.08.2023
இலங்கைக்கு வழங்கியுள்ள 2.9 பில்லியன் டொலர் நீடித்த கடன் வசதியின் இரண்டாவது தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 14 ஆம் திகதி நாட்டிற்கு வருகைதரவுள்ளது. இந்த பிரதிநிதிகள் குழுவினர் செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற 2.9 பில்லியன் டொலர் நீடித்த கடன் வசதி தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, பல இலக்குகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 38ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 02.09.2023 சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை பயணத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர், சீன கப்பலின் இலங்கை பயணத்தை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு நாள் விஜயமாக இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.