31.07.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் காஸ்ட்ரோ (சவரிமுத்து வெள்ளிமயில்- முல்லைத்தீவு), தோழர் ஆனந்தபாபு (கிருஷ்ணகுமார்- திருகோணமலை) ஆகியோரின் 35ஆவது நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 31 July 2023
Posted in செய்திகள்
31.07.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் காஸ்ட்ரோ (சவரிமுத்து வெள்ளிமயில்- முல்லைத்தீவு), தோழர் ஆனந்தபாபு (கிருஷ்ணகுமார்- திருகோணமலை) ஆகியோரின் 35ஆவது நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 31 July 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 31 July 2023
Posted in செய்திகள்
புதிய பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கில மொழி மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களுக்கு புதிய பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதேவேளை, நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவுகளினால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வது தாமதமாகும் என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 31 July 2023
Posted in செய்திகள்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ட்விட்டரில் செயலூக்கமுள்ளவராக இருப்பதுடன் இலங்கை தொடர்பான முக்கியமான சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஜூலி சங் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும் டிசம்பரில் இலங்கையை விட்டு வெளியேறுவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. Read more
Posted by plotenewseditor on 31 July 2023
Posted in செய்திகள்
கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. இதனையடுத்து இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதரகம் தொடர்பான செயற்பாடுகளை புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே நோர்வே தமது தூதரகத்தை இலங்கையில் மூடுவதாக அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையை தவிர ஏனைய பல நாடுகளின் தூதரகங்களையும் நோர்வே மூடிவருகின்றது.
Posted by plotenewseditor on 30 July 2023
Posted in செய்திகள்
X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவை வழங்க கப்பல் நிறுவனத்தின் சட்டத்தரணிகள் இணங்கியுள்ளனர். சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில், இலங்கைக்கு நேற்று(29) அறிவிக்கப்பட்டதாக சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கடல் சூழலைப் பாதுகாப்பதற்காகவும் விபத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காகவும் இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 July 2023
Posted in செய்திகள்
இலங்கைக்கான அதிக கடன் வழங்குநர் என்ற வகையில்இ ஜப்பான்இ இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளினால் மேற்கொள்ளப்படும் கடன் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் முயற்சியில் இணைவதற்கு சீனா வரவேற்கப்படுவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய – ஜப்பான் மன்றத்தில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடன் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுக்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 29 July 2023
Posted in செய்திகள்
ஜப்பானின் வௌிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜப்பானின் கல்விக் கட்டமைப்பின் அனுகூலமான அணுகுமுறையைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜப்பானிய மக்களின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் நேர்மை ஆகியவற்றுக்கு தாம் மதிப்பளிப்பதாக தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 29 July 2023
Posted in செய்திகள்
மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், அதன் உறுப்பினர்களாக உயர் நீதிமன்ற நீதியரசர் M.H.M.D. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்த்ரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். Read more
Posted by plotenewseditor on 28 July 2023
Posted in செய்திகள்
நேற்று (27) கொழும்பில் கைது செய்யப்பட்ட மக்கள் போராட்டக்கள இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே இன்று புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றிருந்த வழக்கொன்றில் ஆஜராகாமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். Read more