Header image alt text

05.08.1999இல் வவுனியாவில் மரணித்த தோழர் கண்ணாடிக் குமார் (ஆறுமுகம் உதயகுமார்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுகள்…

மலர்வு 1937.07.09 உதிர்வு 05.08.2023
பூநகரி செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், இல,45, கரியாலை, நாகபடுவான், பல்லவராயன்கட்டை வதிவிடமாகவும் கொண்டவரும், தோழர் மோகன் (மோகனராசா – பூநகரி) அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி கணபதிப்பிள்ளை பாக்கியம் அவர்கள் இன்று (05.08.2023) சனிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

Read more

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புதிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான கடல்சார், எரிசக்தி மற்றும் நிதி இணைப்புகள் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நகர்வாக அமையும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான  பொருளாதார ஒருங்கிணைப்பு ஏற்பட்டவுடன், அதில் வேறு எவருக்கும் சந்தரப்பம் இருக்கும் என தாம் கருதவில்லை எனவும் இலங்கை உயர்ஸ்தானிகர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாக Hindustan Times செய்தி வௌியிட்டுள்ளது. Read more

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் நிலா எனும் பெயரில் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J. இந்திபொலகே தெரிவித்துள்ளார். பிரதி சனிக்கிழமைகளில் கல்கிசையில் இருந்து இரவு 10 மணிக்கு காங்கேசன்துறை நோக்கி இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது. Read more