இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிலத்தொடர்புக்கு சார்பாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியில் இருந்து பயனடைவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கும் இது அவசியமானது என்று மொரகொட தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு செல்லும் பயணத்தை அதிகரிப்பதற்காக தரைப்பாலங்கள் பாலங்கள் குழாய்கள் மின்சாரம் கடத்தும் பாதைகள் மற்றும் தரையிறங்கும் உட்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார். Read more
		    
ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை மற்றும் ஜப்பான் இணங்கியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜப்பான் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் FUJIMARU Satoshi ஆகியோர் இடையே நேற்று(31) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது. 
வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தீ வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த 23ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வீட்டிற்கு தீ வைத்திருந்தது.  குறித்த வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சந்தேகநபர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.