ஆசிரியர் சேவை அரசியலமைப்பின் பிரகாரம், 5,450 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் போன்ற முக்கிய பாடங்களுக்காக ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். எதிர்வரும் நாட்களில் மாகாண ரீதியில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கூறினார். Read more
		    
வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமையால் சிறைச்சாலை 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன் கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிலருக்கு சின்னம்மை நோய் ஏற்ப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிறைச்சாலை வளாகம் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன் கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.