இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. 37 வருடங்களின் பின்னர் 1800 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறையை துறைமுகங்கள், கப்பல்துறை  விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (04) சென்று பார்வையிட்டார்.  Read more
		    
நாட்டில் தற்போது சமுர்த்தி கொடுப்பனவு பெற்று வரும் 3,93,094 குடும்பங்களுக்கு மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை தொடர்ந்து சமுர்த்தி கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அஸ்வெசும சமூக நலன்புரித்திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளையும், ஆட்சேபனைகளையும் மீள் பரிசீலனை செய்த பின்னர் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.