Posted by plotenewseditor on 6 August 2023
Posted in செய்திகள்
சாரதிகள் இழைக்கும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. சாரதிகள் இழைக்கும் தவறுகளை குறித்த செயலி ஊடாக பயணிகளால் நேரடியாக தெரிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து தொடர்பான விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்தார். இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் இழைக்கும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில், சாரதிகளுக்கு குறைபாடு பரிசோதனை புத்தகமொன்றை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more