முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதிக்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.பிரதீபன்
தலைமையிலான குழுவினர் இன்று கள விஜயம் செய்தனர். தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி மற்றும் ஏனைய திணைக்கள பிரதிநிதிகளும் இந்த கள விஜயத்தில் இணைந்திருந்தனர். Read more
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மருதானை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு பேரணிக்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியினால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம் என தெரிவித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.