வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாக, அகில இலங்கை இந்து மாமன்றம் குறிப்பிட்டுள்ளது. அகில இலங்கை இந்து மாமன்றம் அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த கண்டனத்தினை வெளியிட்டுள்ளது. சைவ ஆதாரங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த நினைப்பதும், அதற்கான கண்டனங்களை வெளிநாடுகள் வரை கொண்டு செல்லும் போது தமது செயற்பாடுகளிலிருந்து தொல்லியல் திணைக்களம் தற்காலிகமாக பின்வாங்குவதும் கண்டிக்கத்தக்க விடயம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
		    
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (11) முற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியான மதுஷங்க திசாநாயக்க, தகவல் கட்டமைப்பு தொடர்பில் அவுஸ்ரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்றுள்ள மதுஷங்க திசாநாயக்க, குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.