இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (11) முற்பகல் தனது கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியான மதுஷங்க திசாநாயக்க, தகவல் கட்டமைப்பு தொடர்பில் அவுஸ்ரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்றுள்ள மதுஷங்க திசாநாயக்க, குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.