Header image alt text

12.08.2005இல் கொழும்பில் மரணித்த தோழர் சின்னத்துரை செல்வராஜா (ஓமந்தை), அன்னாரின் துணைவியாரான இலங்கை வானொலி, தொலைக்காட்சியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா (கொக்குவில்) ஆகியோரின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

12.08.2020இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் உலகன் (வடிவேல் அன்பழகன் – அரசடி) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று….

இன்றைய தினம் வவுனியா பொது நூல்நிலைய நூலகர் மு.ரஞ்சிதமலர் அவர்களின் தலைமையில் ஒரு தொகை நூல்கள் உமாமகேஸ்வரன் நூலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது Read more

இலங்கையில் உள்நாட்டு – வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்துவதற்கான (பொதுமக்கள் பார்வையிடுவதற்கான) சட்ட ரீதியான அனுமதிப்பத்திர கட்டணத்தை அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 1912 ஆம் ஆண்டின்  07 ஆம் இலக்க பொது அரங்காற்றல் சபை சட்டத்தின் கீழ், வெகுசன ஊடக அமைச்சரின் உத்தரவிற்கமைய, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. Read more

சீன மக்கள் குடியரசின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளமை தொடர்பில் இந்தியா அவதானம் செலுத்தியுள்ளது. சீன இராணுவத்திற்கு சொந்தமான HAI YANG 24 HAO எனும் போர்க்கப்பல் நேற்று முன்தினம் (10)  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் இன்று நாடு திரும்பவுள்ள நிலையில், கப்பலின் வருகை குறித்து இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் அரசாங்கம் கவனமாக கண்காணித்து வருவதாக இந்திய வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். Read more