
Posted by plotenewseditor on 14 August 2023
						Posted in செய்திகள் 						  

Posted by plotenewseditor on 14 August 2023
						Posted in செய்திகள் 						  
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த ‘செஞ்சோலை’ சிறுவர்கள் இல்ல வளாகத்தில், 2006 ஒகஸ்ட் 14ஆம் திகதி அரச படையால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் உயிரிழந்த 53 மாணவர்கள் உட்பட 61 பேரது 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.Posted by plotenewseditor on 14 August 2023
						Posted in செய்திகள் 						  
Posted by plotenewseditor on 14 August 2023
						Posted in செய்திகள் 						  
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் (12) குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 77000 செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர்இ அவர்களுக்கு கடந்த காலங்களில் சட்டப்பூர்வ சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 14 August 2023
						Posted in செய்திகள் 						  
பொது போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படும் பஸ், லொறி மற்றும் ட்ரக் வண்டிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானி எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். எனினும், ஏனைய வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாட்டுகள், சில காலங்களுக்கு தளர்த்தப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். Read more