இலங்கையின் கோரிக்கைக்கு அமைய, இந்திய கடற்படைக்கு சொந்தமான Donier-228 கடல் கண்காணிப்பு விமானம்  இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமானப்படை முகாமில் விமானத்தை கையளிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த Donier-228  கடல் கண்காணிப்பு விமானம் இரண்டு வருடங்களுக்கு  நாட்டின் விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க இதனை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்தியா – இலங்கைக்கிடையிலான தொடர்பு மேலும் வலுவடைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாவிக்கப்படும் Donier விமானங்கள் பராமரிப்பிற்காக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படுவதுடன், அது திரும்பக் கிடைக்கும் வரை புதிய விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.