Header image alt text

வவுனியா தெற்கு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்ற மாணவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். மைதானத்திற்கு அருகிலிருந்த ஆழமான நீர் நிறைந்த கிடங்கில் பாடசாலை மாணவர்கள் இருவரும் தவறி வீழ்ந்துள்ளனர். Read more

அமெரிக்காவின் இணையவெளி மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர்  Nathaniel C. Fick உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அரச மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளுடன் அவர் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. சைபர் பாதுகாப்பு, இணையவௌி சுதந்திரம், தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் என்பன தொடர்பில் Nathaniel C. Fick, கொழும்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது. Read more