குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் உற்சவம் இனேஐய தினம் நடைபெற்றது. இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதற்கு கழகத்தின் சர்வதேசக் கிளை உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பு பிரதான காரணமாக அமைந்திருந்தது.

கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ) அவர்கள் நேரில் கலந்து கொள்ள முடியாத நிலையிலும் தொடர்ச்சியாக நிலமையை அவதானித்துக் கொண்டிருந்ததோடு ஜனாதிபதியின் செயலாளருடனும், வடமாகாண ஆளுனருடனும் தொடர்பில் இருந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடத்துவிடாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தியிருந்தார்.
மேலும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீதரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோரும் அவர்களின் தொண்டர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
மேலும் வேலன் சுவாமி அவர்களுடன் பல்கலைக்கழக மாணவர்களும் வருகை தந்திருந்தனர். கூடவே, கழகத் தோழர்கள், தொண்டர்களின் அர்ப்பணிப்பு நிகழ்வை வெற்றிகரமாக செய்துமுடிக்க அடிப்படையாக இருந்தது.
குறிப்பாக, பிரித்தானிய கிளை தோழர்கள் ஜெர்மன் கிளை தோழர்கள், கனடா கிளை தோழர்கள் ஆகியோரது நிதிப் பங்களிப்பு மிகவும் உறுதுணையாக இருந்தது.