உள்ளூராட்சி மன்றங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் C. தொலவத்த தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வந்த போதும், இடையில் இல்லாமல் போன அந்த வாய்ப்பை மீண்டும் இளைஞர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் என அவர் கூறியுள்ளார். இதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more
		    
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் வறட்சியால் 21 ,999 குடும்பங்களை சேர்ந்த 70,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சங்கானை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அராலி, பொன்னாலை பகுதிகளில் சிறு கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.