Posted by plotenewseditor on 21 August 2023
						Posted in செய்திகள் 						  
											
					 
					
					
					  
					  					  
					  
					
வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெப்ப குறிகாட்டி எனப்படும் மனித உடலினால் உணரக்கூடிய வெப்பத்தின் அளவு, அவதானமாக செயற்பட வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  குறித்த பகுதிகளில் வெப்ப குறிகாட்டி 39 மற்றும் 45 செல்சியஸ் இடையே காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  Read more