சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பு அமைப்புகளுடன் கூடிய சில வாகனங்கள் இராணுவ தலைமையகத்தில் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டன. பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் வாகனங்களை பெற்றுக்கொண்டனர்.

சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் 2017ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், நவீன தகவல் தொடர்பு அமைப்புகளுடன் கூடிய  வாகனங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களின் பெறுமதி 45 மில்லியன் யுவான் அல்லது 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

அனைத்து வாகனங்களும் அதிநவீன தகவல் தொடர்பு அமைப்பு, குறுகிய அலை தொடர்பு அமைப்பு, அவசர காலங்களில் நேரடி தகவல் தொடர்புக்கு உதவும் ஆளில்லா வான்வழி வாகனங்களைக் கொண்டுள்ளன.