புளொட் பிரித்தானியக் கிளையின் – 2023 வீரமக்கள் தின நினைவாக பிரித்தானிய தோழர்களின் நிதிப்பங்களிப்பில் வவுனியா வெளிக்குளத்தில் வசிக்கும் திரு. திருமதி சுந்தரராஜன் அகஸ்ரா தம்பதியினரின் வாழ்வாதாரத்திற்காக 1,45920/- ரூபா பெறுமதியான சுயதொழில் ஊக்குவிப்புப் இயந்திரங்களும், அதற்கான மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக 33,080/- ரூபா நிதியுதவியுமாக மொத்தம் 179,000/- பெறுமதியான உதவி இன்று (24.08.2023) வியாழக்கிழமை கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
புளொட் பிரித்தானியக் கிளையின் – 2023 வீரமக்கள் தின நினைவாக பிரித்தானிய தோழர்களின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் வசிக்கும் தோழர் குகன் (கனகசபை கந்தவனம்) அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 203,000/- ரூபா நிதி உதவி கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இன்று (24.08.2023) வியாழக்கிழமை கட்சியின் வவுனியா அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு, வலுசக்தி பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
இன்று(24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது. 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரவீ குமுதேஷ் தெரிவித்தார்.