புளொட் பிரித்தானியக் கிளையின் – 2023 வீரமக்கள் தின நினைவாக பிரித்தானிய தோழர்களின் நிதிப்பங்களிப்பில் வவுனியா வெளிக்குளத்தில் வசிக்கும் திரு. திருமதி சுந்தரராஜன் அகஸ்ரா தம்பதியினரின் வாழ்வாதாரத்திற்காக 1,45920/- ரூபா பெறுமதியான சுயதொழில் ஊக்குவிப்புப் இயந்திரங்களும், அதற்கான மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக 33,080/- ரூபா நிதியுதவியுமாக மொத்தம் 179,000/- பெறுமதியான உதவி இன்று (24.08.2023) வியாழக்கிழமை கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
தோழர் ரவி அவர்கள் (சுந்தர்ராஜன் ரவி) 01.01.1990ஆம் ஆண்டு முசல்குத்தியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து மரணித்ததையடுத்து இவரது பெற்றோரான சுந்தரராஜன் அகஸ்ரா தம்பதியினரை அவரது ஒரே மகள் மிகவும் கஸ்டங்களுக்கு மத்தியில் இதுவரை காலமும் பராமரித்து வந்த நிலையில் இவர்களது சுயதொழில் முயற்சிக்காக மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.
உதவி வழங்கும் நிகழ்வில் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் ராகவன், கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் தயாபரன், பிரித்தானியக் கிளையின் நிர்வாகச் செயலாளர் சுகந்தன், கதிர்காமநாதன், தேசிய அமைப்பாளர் பீற்றர், நிர்வாகச் செயலாளர் பற்றிக், மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
 
 
 
 
 
 
 
 