Header image alt text

25.08.2000இல் மரணித்த தோழர் மீரான் மாஸ்டர் (கே.ஏ.சுப்பிரமணியம் சத்தியராஜன் – சுழிபுரம்) அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ள  நிலையில், அதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறவுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல தேசிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன. Read more

ரயில்வே மின்சார தொழில்நுட்ப ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாளிகாவத்தை ரயில்வே நிலையத்தில் கடமையாற்றும் உப ரயில்வே கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவருக்கும் இடையில் அண்மையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. Read more