இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். வீரகேசரி வார வௌியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வருகை, சீன ஆய்வுக் கப்பலின் வருகை என்பன நிகழ்ச்சிநிரலிடப்பட்டதன் அடிப்படையில் இடம்பெறுவதால் எவ்வித குழப்பங்களும் இல்லை என வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். Read more
அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 96 ஆவது பிறந்தநாள் நினைவுப்பேருரை நிகழ்வில் த.சித்தார்த்தன் (பா.உ) அவர்கள் கலந்து கொண்டிருந்த போது…
Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. வௌியுறவு அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய குறித்த கப்பலுக்கு இவ்வாறு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் 25ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.