Header image alt text

இலங்கைக்கு வழங்கியுள்ள 2.9 பில்லியன் டொலர் நீடித்த கடன் வசதியின் இரண்டாவது தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 14 ஆம் திகதி நாட்டிற்கு வருகைதரவுள்ளது. இந்த பிரதிநிதிகள் குழுவினர் செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற 2.9 பில்லியன் டொலர்  நீடித்த கடன் வசதி தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, பல இலக்குகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. Read more

இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 38ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 02.09.2023 சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது.

Read more

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை பயணத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர், சீன கப்பலின் இலங்கை பயணத்தை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு நாள் விஜயமாக இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலைக்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார். Read more